Postal Weight | 160 g |
---|---|
pages | 96 (without cover) |
author | kavanagar Rama Kanaga Subburathinam |
மனம் வார்த்தைகளால் ஆனது, எண்ணங்கள் நிரம்பி வழிவது, விருப்பு, வெறுப்பு என்னும் அசைவுகளாய் எழும்பி அலைபாய்வது வார்த்தைகள் பிடிக்காதவை – Negative Recordings
மனத்தில் பதிவாகியுள்ள இந்த வார்த்தைகளில் – சில வார்த்தைகள் பிடித்தவை – Positive Recordings. சில
சின்ன வயதில், ‘காமாட்சி’ என்ற பெயரில் ஒரு கொடுமைக்காரச் சித்தி இருந்தார்கள் எனவே, ‘காமாட்சி என்ற பெயரை எங்கே பார்த்தாலும், கேள்விப்பட்டாலும் சித்தி நினைவு வரும்: கடுப்பாய் இருக்கும். ஏனெனில், அது பிடிக்காத பதிவுப் பகுதியில் இருந்தது
இளமைப் பருவம் வந்தது. உயிருக்குயிராய் நேசிக்கும்காதலி ஒருத்தி வாய்த்தாள். அவள் பெயர் காமாட்சி இப்போது, அந்தப் பெயரை எங்கு கேட்டாலும், எப்போது கேட்டாலும் இன்பமாய் உள்ளது. மனம், அந்தப் பெயரை மந்திரம் போல் விடாமல் உச்சரிக்கிறது. காமாட்சி மளிகைக் கடை காமாட்சி துணிக்கடை காமாட்சி உணவகம்.. ஊரில் காமாட்சி என்ற பெயரில் இருக்கும் அத்தனை நிறுவனங்களும் மனதின் அத்துப்படி. அவையெல்லாமே பிடித்த நிறுவனங்களாகிவிட்டன
என்ன ஆயிற்று? “காமாட்சி என்ற பெயர், பிடித்தமான பதிவாகிவிட்டது. Justice Comes on the Positive side. நாளையே காதலி கைவிட்டு விட்டால், ‘காமாட்சி’ மீண்டும் பிடிக்கவே பிடிக்காத பதிவாகிவிடும்
ஆம். மனம், வார்த்தைகளால் ஆனது. எண்ணங்கள் நிரம்பி வழிவது. அவற்றுள் சில பிடித்தவை; சில பிடிக்காதவை நம் மனத்துள் சுழலும் எண்ணங்களை இப்படி வேடிக்கை பார்க்கத் தொடங்கிவிட்டால், விருப்பு வெறுப்புகளை வெல்லும் ஆற்றல் வரும். மனம், வெட்டவெளி ஆகிவிடும். அதன்பிறகு, நாம் எதையும் சாதிக்கலாம். ஏனெனில், நாமெல்லாம் போற்றும் இறைவன், அந்த நிலையில்தான் இருப்பதாகத் தமிழ்மறை கூறுகிறது
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல' - குறள் 4
இந்த இறைநிலை வாய்த்த பிறகு, ஏது அச்சம்? ஏது துன்பம்? எங்கே அவநம்பிக்கை? இருக்கும், அறியாமை
இருள்? மனம் ஒரு கணினி, மூளையே அந்தக் கணினியின் பதிவுத்தட்டு – Computer disc or Floppy. எனவே, மனம்,
மூளைக்கு உள்ளே இல்லை. மூளையை மையமாய் வைத்து வானளாவிய உயரத்திற்கு விரிந்து கிடக்கிறது. கணினித் தட்டின் – Compact Disc – ‘ஆற்றல்
அளவைப் பொறுத்து – 256 bytes… 512 bytes… – ஒரு குறிப்பிட்ட உயரம் வரை பதிவுகள் இருக்கும். ஆனால், மூளை என்ற கணினிக்கு வானளாவிய உயரத்திற்குப் பதிவுகள் இருக்கும். ஆம், ‘வானமே நம் எல்லை வானளாவிய இந்தக் கணினியை வயப்படுத்துவதற்கு
ஆயிரக் கணக்கான நுட்பங்கள் உள்ளன. அவற்றுள் சில நுட்பங்களை மட்டும் இந்த சிறிய நூலின் வழி பகிர்ந்துள்ளேன் அந்த நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்ந்த ‘கவனகக் கலை பற்றியும், கவனகக் கலைஞர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்,
முதலில் உங்கள் மனத்திரை வெட்டவெளி ஆகட்டும் பின்பு அதில் பதிவுகள் தோன்றட்டும் மறையட்டும்.
மளமென்னும் வானளாவிய கருவூலத்திலிருந்து கொஞ்சமாய் எடுத்து, நூல் வடிவில் வழங்கியுள்ள இந்த ‘அறிவுநிதி’-உங்களுக்குப் பயன்தரும் என்று நம்புகிறேன்