Postal Weight | 240 g |
---|---|
pages | 224 (without cover) |
Author | Thirukural Rama Kanaga Subburathinam |
எங்கள் கிராமத்தில் ஒரு நாள் இரவு… கூகி வேலை செய்த
அனுப்பு, கையை மடக்கி வைத்து, தெருத் திண்ணையில் படுத்து நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தேன்
நடுநிசியில் என் தாத்தா என்னைத் தட்டி எழுப்பினார் அதுவும் நீண்ட நேரம் போராடி என்னை விழிக்க வைத்தார் எழுந்து உட்கார்ந்ததும் கண்ணைக் கசக்கியபடி, “என்ன
தாத்தா என்று கேட்டேன்
“தலையணை வைக்காமல் உறங்கிக் கொண்டு இருக்கிறாயே, இந்தா, இதை வைத்துப் படு” என்று கூறி, ஒரு தலையணையைக் கையில் திணித்துவிட்டுப் புறப்பட்டார்
தலையணை கிடைத்தது. ஆனால் தூக்கம் போய்விட்டது
எனக்கு தலையணை முக்கியமா, தூக்கம் முக்கியமா என்பது கூடத் தெரியாமல் இப்படி எழுப்பி விட்டார்!…’ என்று புலம்பியபடி, தலையணையை மடியில் கிடத்தி விடிய விடியத்
தாலாட்டிக் கொண்டிருந்தேன்
என் தாத்தா ராசிதான் அப்படி என்று நினைத்தேன் பிற்காலத்தில் உதவி செய்வதாய் நினைத்து, குறிக்கோளுடன் நான்
செய்த சில செயல்களும் இப்படித் தலையணையைக் கொடுத்து தூக்கத்தைக் கெடுக்கும் சீர்திருத்தம் போலவே ஆகிவிட்டது
எனவே, வாழ்க்கையில் குறிக்கோள் என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் இயல்பாய் இருக்கத் தொடங்கினேன்
ஆனால், விரும்பினால் எந்த நல்ல குறிக்கோளும் என்னைக் கருவியாய்ப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் தயார் நிலையில் இருந்தேன். தொட்டதெல்லாம் வெற்றி தொடங்கியது.
பிறக்கும்போது நாம் வணிகராக, அரசு வெறும் குழந்தைகள் தாம் வழிய ராகவா, பொதுநலத் தொண்டராக, கவிஞராகவோ, கலைஞராக, எழுத்தாளராகவோ பிறப்பதில்லை.
முன்னாலிருந்து ஏதோ ஒரு கவர்ச்சி நம்மை ஈர்ப்பதால் அல்லது பின்னாலிருந்து ஏதோ ஒரு தேவைநம்மைத் தள்ளுவதால் நகரத் தொடங்குகிறோம்; செயல்படுகிறோம்.
அதன் விளைவாய் மேலே குறிப்பிட்டது போன்று ஏதேனும் ஒரு வடிவத்தை எடுக்கிறோம் அல்லது மாறி, மாறிப் பல வடிவங்களை எடுக்கிறோம்; அந்த வகையில் குறிக்கோளற்ற நான் பல வடிவங்கள் எடுத்தேன்
வறுமை என்னை தினக்கூலியாக்கியது; படிப்பு ஆசிரியனாக்கியது; பொருளாசை வணிகனாக்கியது; பொறுப்பை உணர்த்திய ‘இலக்கிய வீதி’, பதின் கவனகராக்கியது; குமுதம் குடும்பத்தைச் சேர்ந்த மலர் மல்லிகை’ மாத இதழ் என்னை எழுத்தாளன் ஆக்கியிருக்கிறது
மனம் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் எனக்குத் தெரிந்ததை விளக்கி இருக்கிறேன்
மனம், முழு உரிமையுடன் உலவும் இயல்பு உடையது அதனால்தான், மனத்தைப் பெற்றிருக்கும் மனிதனும் சர்வ சுதந்திரமாய் இந்தப் புவியில் உலவும் ஆற்றலைப் பெற்றுள்ளது. ஆடு மாடுகளுக்கு, இலைகளைக் கடிக்கும் அளவுக்கு உரிமை உண்டு. மரத்திற்கோ, புதிய இலைகளை உற்பத்தி செய்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆற்றல் உண்டு